nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell
Veiledning till foreldre

LEXIN விளக்கக் கையேடு

LEXIN என்றால் என்ன?

LEXIN என்பது சிறுபான்மையினர்க்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நோர்வேயிய, மற்றும் பல மொழி இணைய அகராதியாகும். தொடர்ந்து விருத்தி செய்யப்பட்டு வரும் இவ்விணைய வளமானது இன்று 7500 இற்கும் 10000இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான சொல்வளங்களைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையான சொற்கள் பெயர்ச்சொற்களாகும். 

LEXIN ஆனது மாணவர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அக்கறையானவர்க்கு உகந்தது.

LEXIN இல் சொற்கள்பற்றிய பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

• சொல் எப்படி உருபை ஏற்கிறது.

• சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது, எழுதப்படுகிறது.

• சொல்லின் கருத்து.

• சொல்லை விளங்கக்கூடியவகையில் பொருத்தமான உதாரணங்கள்

• பன்மொழிகளில் படங்களுடன்கூடிய விடயங்களடிப்படையான சொற்கூட்டங்கள்

• இலக்கணக்குறிப்புகள், உருவாக்கங்கள் 

 

LEXINஐ ஏன் பாவிக்கலாம்?      

               சொற்களே மொழிக்கல்வியின் முக்கிய மையமாகும். திட்டமிட்டமுறையில் சொல்வளத்தை விருத்தி செய்வதன்மூலம், மாணவர் பாடநூல்களையும் மற்றைய எழுத்துவடிவங்களையும் வாசித்து விளங்கிக்கொள்வது இலகுவாயிருக்கும். நோர்வேயிய மொழிப்போதனையிலும், மற்றைய பாடங்களின் போதனையிலும் டுநுஓஐN சிறப்பாகப் பாவிக்கப்படலாம்.

LEXINஐப் பாவிப்பதன்மூலம் மாணவன்

• சொற்களையும் படங்களையும் இணைப்பதன்மூலம், தாய்மொழியிலும் நோர்வேயிய மொழியிலும் புதிய சொற்களை இலகுவாகக் கற்கலாம்.

• வித்தியாசமான சந்தர்ப்பங்களில் சொற்களை எவ்வாறு பாவிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

• தாய்மொழியிலும் நோர்வேயிய மொழியிலும் சொல்வளத்தைப் பெருக்குவதுடன் மேலும் வளப்படுத்தலாம். 

• கடினமான, மேம்பட்ட வாய்மொழி மற்றும் எழுத்து வடிவங்களைத் தயாரிக்கலாம். 

• இணையத்திலுள்ள தகவல்களை எவ்வாறு தேடுவது, பாவிப்பது, மதிப்பிடுவது என்பதைக் கற்பதன்மூலம், கணணியல் ஆளுமையை விருத்தி செய்யலாம்.

LEXIN ஐப் பாவிப்பதன்மூலம் ஆசிரியர்

• கலைச்சொற்கள், மற்றும் புழக்கத்திலில்லாத சொற்கள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன, எத்தருணங்களில், எவ்வாறு பாவிக்கப்படுகின்றன என்பதை மாணவர்க்கு எடுத்துக்காட்டலாம். 

• புதிய சொற்களைக் மாணவர் சந்திக்கும்போது, ஒப்பிட்டடிப்படையில் கற்பிக்கலாம்.

• மாணவர்க்கு தாய்மொழியிலும், நோர்வேயிய மொழியிலும் உவமைகள், மரபுத்தொடர்கள், இணைமொழிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். 

LEXIN ஆனது நவீன தொலைபேசிகள், மாத்திரைகள் போன்ற சாதனங்களுக்கு ஏற்றவிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no