பெற்றோர் பக்கம்

Informasjon til foreldre

Skriv ut

foreldre

பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டிய நோர்வே பாடசாலை பற்றிய பல குறிப்புகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

1. Fritak fra undervisning

fy;tpNghjidapypUe;J tpLtpg;G

1.2

I Norge er det skoleplikt. Det betyr at barna har plikt til å møte på skolen hver dag. Dersom en elev skal ha fri må foreldrene søke om dette. Lærer kan gi en dag fri. Rektor kan gi inntil 14 dager fri. Foreldrene må levere søknad til lærer eller kontoret.

நோர்வேயில் பாடசாலைக் கல்வி கட்டாயமானது. அதாவது, அனைத்துக் குழந்தைகளும் தினமும் பாடசாலைக்குச் சமூகமளிப்பது சட்டடப்படி கட்டாயமானது. மாணவர்க்கு பாடசாலையிலிருந்து விடுமுறை தேவைப்படுமிடத்து, பெற்றோர் விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியர் ஒரு நாள் விடுமுறையை வழங்கலாம். புhடசாலை அதிபர் 14 நாட்கள்வரை விடுமுறை வழங்கலாம். விடுமுறைக்கான விண்ணப்பத்தை, ஆசிரியரிடம் அல்லது பாடசாலை அலுவலகத்தில் பெற்றோர் ஒப்படைக்கலாம்.  

1.3

Opplæringsloven omhandler to ulike typer permisjoner:

கல்விச் சட்டத்தின்படி, பாடசாலைக்குச் சமூகமளிக்கமாலிருக்கவேண்டிய தேவையிருப்பின் இருவகையான அனுமதிகளுக்குத் தோற்றலாம்.

1.4

  • Når det er forsvarlig, kan en elev gis permisjon fra den pliktige opplæringen i inntil to uker.
    • கல்விச் சூழ்நிலை இடம் கொடுக்குமிடத்து, மாணவர்க்கு இரு வாரங்கள்வரை விடுமுறைக்கான அனுமதி வழங்கப்படலாம்.
    • Permisjon i inntil to uker kan bare gis dersom det vurderes som forsvarlig for elevens opplæring. Det er ikke tillatt å gi permisjon ut over to uker.
  •  மாணவரின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படாதெனக் கருதுமிடத்து மட்டுமே, மாணவர்க்கு இரு வாரங்கள்வரை விடுமுறைக்கான அனுமதி வழங்கப்படலாம். இருவாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கப்பட முடியாது.

1.5

  • Elever som hører til et trossamfunn utenfor den norske kirke, har rett til permisjon på trossamfunnets helligdager når foreldrene sørger for nødvendig opplæring i permisjonstiden.
  • விடுமுறை காலத்தில் கல்விப்போதனையை மாணவர் பெற்றுக்கொள்ளும் பொறுப்பை பெற்றோர் ஏற்றுக் கொள்ளுமிடத்து, நோர்வேயிய கிறித்துவ மதத்தைச் சாராத மற்றைய மதங்களைச் சார்ந்தவர்கள் தமது சமய முக்கிய நாட்களை அனுட்டிப்பதற்கு பாடசாலையிலிருந்து விடுமுறைகோருவதற்கான உரிமை உண்டு.
    • Foreldre til elever som har rett til permisjon fordi trossamfunnet de tilhører har helligdag, må sørge for nødvendig undervisning i permisjonstiden slik at eleven kan følge med i den allmenne undervisningen etter at permisjonstiden er ute.
    • தமது முக்கிய சமய நாட்களை அனுட்டிப்பதற்கு, தமது குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் உரிமையைக் கொண்ட மாணவரின் பெற்றோர், விடுமுறைக் காலத்தின் பின் மாணவன் தமது கல்வியை எந்தவிதப் பாதிப்புமில்லாமல் தொடர்வதற்கான வகையில் மாணவரைத் தயார்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளனர்.    

1.6

Dersom elever blir tatt ut av skolen i mer enn to uker blir de skrevet ut fra skolen.

இரண்டு வாரங்களுக்கு மேல் பாடசாலைக்கு மாணவர் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் பாடசாலையிலிருந்து நீக்கப்படுவர்.

2.1

Foreldresamarbeid - plikter og rettigheter

பெற்றோர் பங்களிப்பு – கடமைகளும் உரிமைகளும்

 2.2

Det er foreldrene som etter loven har hovedansvar for barnas oppdragelse og skolegang. Foreldre har derfor medansvar i skolen.

Opplæringen drives etter Læreplan for Kunnskapsløftet, som er en forskrift til opplæringsloven.

பிள்ளைகள் வளர்ப்பு, கல்வி என்பனவற்றின் பிரதான பொறுப்பு, சட்டப்படி பெற்றோருடையதாகும். பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியிலும் பெற்றோருக்கு பாடசாலையுடன் சேர்ந்த ஒரு பொறுப்பு உண்டு. கல்விச்சட்டங்களுக்கமைய உருவாக்கப்பட்ட 'Kunnskapsløftet' எனப்படும் கல்வித்திட்டத்துக்கமையவே கல்விப்போதனையானது நடைபெறும்.

2.3

Skolen legger til rette for et godt samarbeid med foreldrene, for eksempel ved ukeplan, telefon, e-post og skolens hjemmeside på internett.

வாரத்திட்டம், தொலைபேசி, மின்னஞ்சல், பாடசாலையின் இணையப்பக்கம் போன்றவற்றின் ஊடாக, பாடசாலையானது பெற்றோருடன் இணைந்து இயங்குகிறது.

2.4

Foreldre har plikt til å sørge for at elevene kommer til skolen når de skal. Ved fravær leveres skriftlig melding. Skal eleven hå fri, må det søkes på forhånd.

மாணவர் பாடசாலைக்கு தவறாது சமூகமளிக்கப்பண்ணும் கடமை பெற்றோரைச் சார்ந்தது. மாணவர்க்கு விடுமுறை தேவைப்படுமிடத்து, அதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

2.5

I læreplanen er et av fagene RLE - religion, livssyn og etikk. Dette er et kunnskapsfag som alle elever deltar i. Foreldre har derimot rett til å melde sitt barn fritatt fra aktiviteter som ikke er forenlig med deres tro eller livssyn.

கல்வித்திட்டத்தின்படி, RLE எனப்படும், சமயம், வாழ்க்கைநெறி, நீதிநெறி என்பவற்றைப்பற்றிய அறிவைத்தரும் கல்வி போதிக்கப்படும். இப்பாடமானது அறிவுசார்ந்த கல்வியாகவே போதிக்கப்படும் என்பதால், இக்கற்றலில் அனைத்து மாணவரும் பங்களிக்க வேண்டும். ஆனால், தமது சமயத்திற்குப் புறம்பான வேறு சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் தமது குழந்தைகள் பங்குபெறுவதை விரும்பாதவிடத்து, பெற்றோர் அத்தகைய சமய நடவடிக்கைகளில் பங்குபெறாமல் இருப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.     

2.6

Læreplanen har også som mål i faget kroppsøving at elever etter 4. trinn skal være trygge i vann og være svømmedyktig. Etter 7. trinn skal elevene kunne utføre grunnleggende teknikker i svømming. Skolen regner med at alle elevene deltar i denne opplæringen. Foreldre som likevel velger å be barna fritatt, skal melder fra skriftlig til skolen, og overtar da ansvaret for at barna får den opplæringen de skal i svømming.

நீச்சல்பாடக் கல்வித்திட்டத்தின்படி, 4ஆம் தரத்திற்குமேல் மாணவர், நீச்சல் ஓரளவு தெரிந்தவராயும், நீரினுள் இறங்குவதற்கு பயமில்லதவராயும் இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். 7ஆம் தரத்திற்கு மேல் மாணவர் நீச்சலில் அடிப்படை ஆளுமைகளைக் கொண்டவராயும் இருக்கவேண்டும். 

இருப்பினும், பெற்றோர் தமது குழந்தைகள் இப்பயிற்சிகளைப் பெறத் தேவையில்லை எனக் கருதும்பட்சத்தில், அதைப் பாடசாலைக்கு முன்கூட்டியே அறிவிப்பதுடன், பிள்ளைகள் நீச்சல் ஆளுமைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்யும் முழுப் பொறுப்பையும் பெற்றோரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.     

 3.1

Rett til tospråklig opplæring

இருமொழிக் கல்விப் போதனைக்கான உரிமை

Elever fra språklige minoriteter representerer et etnisk, religiøst, kulturelt og språklig mangfold, og de kommer til skolen med svært ulike forutsetninger. Alle elever i grunnskolen har en generell rett til en opplæring som er tilpasset den enkeltes forutsetninger. I tillegg har tospråklige elever rett til særskilt norskopplæring inntil eleven har "tilstrekkeleg dukleik i norsk til å følgje den vanlege opplæringa". Om nødvendig har eleven også rett til morsmålsopplæring, tospråklig fagopplæring eller begge deler.

சிறுபான்மை மொழி பேசும் மாணவர் வெவ்வேறு இன, மத, கலாச்சார, மொழி விழுமியங்களைக் கொண்டு, பாடசாலைக்கு வித்தியாசமான தரத்துடனும், எதிர்பார்ப்புகளுடனுமேயே வருகிறார்கள். அடிப்படைக்கல்வி பெறும் மாணவர் தமது நிலைக்கேற்ற, ஒழுங்கமைக்கப்பட்ட கல்வியைப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளார்கள். அத்துடன், நோர்வேயிய மொழியில் பாடசாலைக் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு நோர்வேயிய மொழி அறிவைப் பெறும் வரையில்,  'பிரத்தியேகமான' நோர்வேயிய மொழிக்கல்வியைப் பெறும் உரிமை இருமொழிபேசும் மாணவர்களுக்கு உண்டு. தேவைப்படுமிடத்து, தாய்மொழிக்கல்வியை அல்லது இருமொழிகளினூடு மற்றைய பாடங்களில் கல்வியை, அல்லது இரண்டு கல்விகளையும் பெற்றுக் கொள்ளும் உரிமையும் இம்மாணவர்க்கு உண்டு. 

3.2

1. Særskilt norskopplæring for elever fra språklige minoriteter

Elever som starter skolegangen sin i Norge med begrensede ferdigheter i norsk, og som ikke kan ta del i den ordinære opplæringen med godt utbytte, gis særskilt norskopplæring så lenge de har behov for det.

1.      சிறுபான்மை மொழி பேசும் மாணவர்க்கான 'பிரத்தியேக' நோர்வேயிய மொழிக்கல்வி

    நோர்வேயிய மொழியில் மட்டுப்படுத்தப்பட்ட ஆளுமையை மட்டுமே கொண்டு, வகுப்பில் நடாத்தப்படும் பொதுவான கல்விப்போதனையினூடு, போதுமான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ள நோர்வேயில் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்க்கு, அவர்தம் தேவை பூர்த்தி செய்யப்படும்வரை, 'பிரத்தியேக' நோர்வேயிய மொழிக்கல்வி வழங்கப்படும்.            

 

3.3 

2. Morsmålsopplæring for elever fra språklige minoriteter er et opplæringstilbud for elever som har et annet morsmål enn norsk og samisk. Retten til opplæring på morsmål kan ikke strekke seg lenger enn retten til særskilt norskopplæring. Opplæringen følger læreplan i morsmål for elever fra språklige minoriteter.

2. நோர்வேயிய அல்லது சாமிய மொழி தவிர்ந்த மற்றைய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுபான்மை மொழி பேசும் மாணவர்க்கு தாய்மொழிக்கல்வியைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. தாய்மொழிக்கல்வியைப் பெறும் உரிமையானது, 'பிரத்தியேக' நோர்வேயிய மொழிக்கல்வி பெறும் உரிமை இருக்கும் காலத்திற்குமேல் நீடிக்கப்பட முடியாது. தாய்மொழிக் கல்விப் போதனை தாய்மொழிக் கல்விக்கான நோர்வேயிய கல்வித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே நடாத்தப்படும். 

3.4 

3. Fagopplæring på morsmål

Elever med annet morsmål enn norsk og samisk kan få fagopplæring på morsmål eller norsk med andrespråktilnærming. Fagopplæring på morsmål eller på tilrettelagt norsk har som overordnet mål å gjøre skolenes lærestoff tilgjengelig for elevene på morsmål eller på tilrettelagt norsk inntil elevene kan følge ordinær fagopplæring.

   நோர்வேயிய அல்லது சாமிய மொழி தவிர்ந்த மற்றைய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர் தாய்மொழியினூடு அல்லது நோர்வேயிய மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தி, மற்றைய பாடங்களில் கல்வியைப் பெறலாம். தாய்மொழி அல்லது பிரத்தியேக நோர்வேயிய மொழியினூடு மற்றைய பாடங்களைப் போதிப்பதன் நோக்கம், சிறுபான்மை மொழி பேசும் மாணவர் வகுப்பில் போதிக்கப்படும் பொதுவான கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆளுமையைப் பெற்றுக் கொள்ளும்வரை, பாடசாலையில் போதிக்கப்படும் கல்வியை அனைத்து மாணவரும் பெற்றுக் கொள்ள வழிவகுத்தலேயாகும்.    

4.1

Hvordan kan du hjelpe barnet ditt i skolehverdagen?

Bruk lekseplan og annen informasjon fra skolen. Vær engasjert i barnets læring og skap lærelyst.

பாடசாலைக் கல்வியில் நீங்கள் எவ்வாறு உங்கள் குழந்தைகளுக்கு உதவலாம்?

பாடசாலையினால் தரப்படும் வீட்டுவேலைத் திட்டத்தையும், மற்றைய தகவல்களையும் வாசித்துப் பயன்பெறுக. தங்கள் குழந்தையின் கல்வியில் அக்கறை செலுத்துவதோடு, கல்விக்கான ஆர்வத்தையும் ஊட்டுக.

4.2

Sørg for at barnet møter på skolen kledd til de aktiviteter de skal delta på, gym, svømming, turer, uteaktiviteter osv.

தங்கள் குழந்தைகள் பாடசாலைக்கு வருகைதரும்போது பாடசாலை நடவடிக்கைகளான உடற்கல்வி, நீச்சல், சுற்றுலா மற்றும் வெளி நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான உடைகளைக் கொண்டு வருவதைக் கவனித்துக் கொள்ளவும்.

4.3

Møt opp på foreldremøter. Her treffer dere foreldrene til de andre barna, og får informasjon om skolen. Samtidig viser dere barnet at skolen er viktig.

பெற்றோர் கூட்டங்களுக்குத் தவறாது சமூகமளிக்கவும். இக்கூட்டங்களில் தாங்கள் மற்றைய பெற்றோரையும் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெறுவதோடு, பாடசாலைபற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் பாடசாலை எவ்வளவு முக்கியம் என்பதையும் மாணவர்கள் இதன் மூலம் புரிந்துகொள்ளச் செய்யலாம்.

4.4

Utviklingssamtalen er en viktig samarbeidsarena mellom skole og hjem. Her kan læreren få bedre kjennskap til deres barn, og dere blir bedre kjent med skolen og læreren. Sammen kan dere legge grunnlaget for en god faglig oppfølging.

பாடசாலை, பெற்றோர்க்கிடையேயான ஒத்துழைப்புடனான சேர்ந்தியங்கலில், ஆசிரியருடனான வகுப்பறைச் சந்திப்பு முக்கிய பங்கை வகுக்கிறது. ஆசிரியர் தம் மாணவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவுவதுடன், தாங்களும் பாடசாலையுடனும் ஆசிரியருடனும் தொடர்பை வளர்க்கவும் இச்சந்திப்பு வழிவகுக்கிறது.

Førsteklasse foreldre

Skriv ut

Informasjon til førsteklasse foreldre:

Welcometoschool1.gradetamil.pdf

Foreldre deltagelse

Skriv ut

Det er veldig for både barn og skolen at foreldre deltar aktivt i skolen.

Barnaogskolentrengerdeg_tamil.pdf

Informasjon til 8.klasse foreldre

Skriv ut

Informasjon til 8. klasse foreldre!  

Welcometoschool8.gradetamil.pdf

Language Selection

Nett ressurser

lexin_header_med_forl
matte-begrepp
bildteman_logo
animationstema_logo

Nyhetsmating (RSS)

Få seneste nytt direkte til din nettleser, intranett eller nettsted
.
modersmål
Innholdsansvarlig: Merethe Fagernæs, 23 30 27 88 - Nettansvarlig: Knut Carlsen, 21 00 00 81 www.morsmal.no