16 நவம்பர் 2011
தமிழ்விக்கிப்பீடியாவினால் "தமிழ் விக்கி ஊடகப் போட்டி" நடாத்தப்படுகிறது. தமிழ், தமிழர், தமிழ் இடங்கள் தொடர்பான படங்கள், ஒலித்தொகுப்பு, ஒளித்தொகுப்பு போன்ற ஊடகக் கோப்புக்களை wikimedia commons இல் பதிவேற்றுவதுதான் போட்டி. இந்தப் போட்டியில், உலகில் இருப்பவர்கள் அனைவரும் (தமிழர்கள் அல்லாதவரும் கூட) பங்கேற்கலாம். தரவேற்றம் செய்யப்பட வேண்டிய தளம் தமிழ்த் தளமாக அல்லாமல் (அதாவது தமிழ் விக்கிப்பீடியா அல்ல), ஒரு பொதுவான தளமாக இருக்கின்றது. இங்கிருந்து தேவையானவற்றை நாம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்குப் பெற முடியும்.
மேலதிக விபரங்களுக்கு: DetailedGuideUpdated.pdf