தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்
25 அக்டோபர் 2010
நோர்வேயிலுள்ள, இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரத்தில் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் முதல் முறையாக தமிழ் - தாய்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடே ஸ்கான்டினாவியாவிலேயே, முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாக அறியப்படுகிறது. இந்த மாநாடானது பேர்கன் நகரசபையினரால், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate) இணைந்து நடத்தப்பட்ட ஒரு மாநாடாகும். மாநாட்டிற்கு இருமொழிக் கல்வியில் ஆர்வம் கொண்ட, நோர்வே, சுவீடனைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பொதுவில் அழைப்பு [1] அனுப்பப்பட்டு, ஆர்வமுள்ளவர்கள் தம்மை பதிவு செய்துகொண்டு வந்து கலந்து கொண்டனர். அத்துடன் மலேசியா, கனடாவைச் சேர்ந்த தமிழ் கல்வியில் நாட்டம் கொண்ட துறைசார் அறிஞர்கள் சிலரும் விசேட அழைப்பின் பெயரில் வந்து கலந்து கொண்டு தமது அறிவை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள இவ்வாக்கத்தின் முழுப்பகுதியையும் இங்கே சுட்டுவதன் மூலம் வாசிக்கலாம். நன்றி, கலை!
தமிழ் விக்கிப்பீடியா